கருமுட்டையை உறைய வைத்த இந்திய நடிகைகள்!! இந்த ஹீரோயினுமா?

Pregnancy Indian Actress Priyanka Chopra Kriti Sanon
By Jai Jul 09, 2026 12:30 PM GMT
Report

சினிமாத்துறையில் நடிக்கும் நடிகைகள் வாய்ப்புகள் குறையாமல் இருக்க திருமணம் செய்வதை தாமதப்படுத்துவார்கள். அதற்காக தங்களின் கருமுட்டையை உறைய வைக்கும் விஷயத்தை செய்வார்கள்.

கருமுட்டையை உறைய வைத்த இந்திய நடிகைகள்!! இந்த ஹீரோயினுமா? | Indian Actresses Confirmed Freezing Their Embryos

அப்படி இந்திய நடிகைகள் யார் யார் தங்களின் கருமுட்டையை உறைய வைத்துள்ளார்கள், எந்த வயதில் அதை செய்தார்கள் என்று பார்ப்போம்..

மோனா சிங், ராக்கி சாவந்த்

பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான மோனா சிங், தன்னுடைய 34 வயதில் கருமுட்டையை உறைய வைத்தார். தன்னுடைய விருப்பத்திற்கேற்ப குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று இருந்துள்ள மோனா சிங்கிற்கு இப்போது 44 வயது.

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை ராக்கி சாவந்த், 34 வயதில் கருமுட்டையை உறைய வைத்துள்ளார். அவருக்கு இப்போது 47 வயது.

கருமுட்டையை உறைய வைத்த இந்திய நடிகைகள்!! இந்த ஹீரோயினுமா? | Indian Actresses Confirmed Freezing Their Embryos

தனிஷா முகர்ஜி, மாஹி விஜ்

நடிகை தனிஷா முகர்ஜி தன்னுடைய 39 வயதில் கருமுட்டையை உறைய வைத்திருக்கிறார். அவருக்கு தற்போது 48 வயதாகிறது.

பிரபல பாலிவுட் தொகுப்பாளினி மாஹி விஜ், 36 வயதில் கருமுட்டையை உறையவைத்திருக்கிறார்.

கருமுட்டையை உறைய வைத்த இந்திய நடிகைகள்!! இந்த ஹீரோயினுமா? | Indian Actresses Confirmed Freezing Their Embryos

ஏக்தா கபூர், ப்ரியங்கா சோப்ரா

தயாரிப்பாளரும் நடிகையுமான ஏக்தா கபூர், 36 வயதில் தன்னுடைய கருமுட்டையை உறைய வைத்திருக்கிறார். இப்போது அவருக்கு 51 வயதாகிறது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, தன்னுடைய 30 வயதில் கருமுட்டையை உறைய வைத்திருந்தார். 33 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது அவருக்கு 43 வயதாகிறது.

கருமுட்டையை உறைய வைத்த இந்திய நடிகைகள்!! இந்த ஹீரோயினுமா? | Indian Actresses Confirmed Freezing Their Embryos

க்ரித்தி சனோன்

பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன், திருமண வாழ்க்கை இப்போதைக்கு இல்லை என்று கூறி கருமுட்டையை உறைய வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

கருமுட்டையை உறைய வைத்த இந்திய நடிகைகள்!! இந்த ஹீரோயினுமா? | Indian Actresses Confirmed Freezing Their Embryos