வயசு வித்தியாசம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்ட பிரபலங்கள்... ஐஸ்வர்யா ராயும் இந்த லிஸ்ட்லியா?

Aishwarya Rai Nayanthara Aishwarya Rajinikanth Vignesh Shivan Priyanka Chopra
By Edward Aug 20, 2022 08:40 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்கள் தன்னுடன் நடித்த சக நடிகை - நடிகர்களுடன் காதல் வலையில் சிக்கி அவரையே திருமணம் செய்து கொள்வார்கள். காதலுக்கு வயசு வரம்பில்லை என்று கூறுவதற்கேற்ப இந்திய பிரபலங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வார்கள். அதில் முக்கிய நட்சத்திரங்கள் யார் யார் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பார்ப்போம்.. 

நடிகர் தனுஷ் தன்னைவிட 2 வயது மூத்த பெண் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 21 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர்.

மலையாள சினிமாவின் பிரபல நடிகை பூர்ணிமா, இந்திரஜித் என்பவரை 2002ல் திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமா அவரை விட ஒரு வயது முத்தவர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு 2 வயது மூத்தவர் நம்ரதா ஷிரோத்கர் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றார்.

கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷ் 2 வயது மூத்த ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது மூத்த பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாயிஷா தன்னை விட 17 வயது மூத்த நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஷில்பா செட்டி ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 3 மாதம் இளையவரான அவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவை விட 2 வயது இளையவர்.

நடிகர் சைஃப் அலிகான் 12 வயது மூத்த அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 13 வருடங்களுக்கு பின் அவரை விவாகரத்து செய்து பிரிந்து கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 6 வயது மூத்தவரான அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நயன் தாரா தன்னைவிட ஒரு வயது இளையவரான விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டார்.