சர்வைவர் போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர்! ரோபோ சங்கர் மகளின் வேலை இதுதானா?

television survivor indraja roboshankar
By Edward Sep 30, 2021 08:26 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தற்போதைய சேனல்களில் பெரும் போட்டிகள் நிலவி வருகிறது. டி ஆர்பியை உயர்த்த பல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்பட்டு வரும் நிலையில் தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ், மாஸ்டர் செஃப், சர்வைவர் நிகழ்ச்சிகள் போட்டிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியேறினார்.

இந்த வாரத்தில் ஏற்பட்ட எலிமினேஷனில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா வெளியேறியுள்ளார். பிகில் படத்தில் நடிக்க ஆரம்பித்து பிரபலமான இந்திரஜா சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சியில் வெளி்யேறிய பின் பல இணையதளத்திற்கு பேட்டிகளை கொடுத்து நிகழ்ச்சி அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சின்ன வயதில் இவ்வளவு தூரம் வந்தது பாசிட்டிவாக உள்ளது இது நல்ல விஷயம் என அர்ஜுன் பாராட்டினார். பின்பு இந்திரஜா சக போட்டியாளரை பற்றி பேசத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரொம்ப நல்லவங்க யாருமே இல்ல அவர்கள் அவங்க விளையாட்டில் கவனமாக இருக்கிறார்கள்.

இந்திரஜா சக போட்டியாளர்களுக்கு பட்டம் கொடுத்துள்ளார். ராம் பச்சோந்தியாக இருப்பார் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றால் அவர் வேண்டும் என்று சொல்லக் கூடிய இயல்பு. விக்ராந்த் நாம் எப்படி அவரிடம் நடக்கிறோமோ அதுபடியே நம்மிடம் நடந்து கொள்வார். அவருக்கு மூக்கு கண்ணாடி என்ற பட்டம் வைத்தார். பாய்சன், விஷக்கிருமி என்ற இரு பட்டங்களையும் காயத்ரி, ஐஸ்வர்யாவுக்கு கொடுத்தார். இவர்கள் இருவரிடமும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கணும். நான் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு பார்வதிக்கு எப்போதுமே உண்டு, அது எல்லோருக்கும் தெரியும். லேடி கேஷ் ஒரு புள்ள பூச்சி அவங்க வேலைய அமைதியாக பார்த்துட்டு இருப்பாங்க.

சரவணன், லட்சுமி பிரியா சாது மிரண்டா. இருவரும் அவங்க வேலையைப் பார்ப்பார்கள் யாராவது தலையிட்டு அவங்க அவ்வளவு தான். கோல்டன் ஹார்ட் இங்கே யாருமே இல்ல இப்படி எல்லாருக்கும் ஒரு பட்டம் கொடுத்துள்ளார். இதற்கு பலரும் நல்ல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.