ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா..
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தற்போது வெள்ளித்திரை படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் ரோபோ சங்கர். பிரியங்கா என்பவரை திருமணம் செய்த ரோபோ சங்கர் இந்திரஜா என்ற மகளை பெற்றெடுத்தார்.
சில வருடங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் படுமோசமாக ஒல்லியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
அதற்கு காரணம் அளவுக்கு மீறிய மதுவால் மஞ்சள் காமாலை வந்ததால் உடல்நிலை மோசமானதாக சிலர் கூறினர். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ரோபோ சங்கர் தன் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இணையத்தில் மாமா என்ற கேப்ஷனுடன் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்ததை பார்த்தவுடன் இருவரும் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.
அதற்கு இருவரும் ஆமா, தேதி இன்னும் முடிவு செய்யவில்லை, பண்ணதும் சொல்றோம் என்று கார்த்திக் கூறியும், இந்திரஜா, இன்னும் தேதி முடிவு செய்யவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வரும், என் சந்தோஷத்தை ரசிகர்களுக்கும் நல விரும்பிகளுக்கும் கண்டிப்பாக கூறுவேன் என்று பதிலளித்துள்ளார்.
கார்த்திக் மதுரை சேர்ந்தவர் என்றும் இயக்குனராகுவதற்கு முயற்சி செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
