முகேஷ் - நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி!! மொத்த மதிப்பு இத்தனை கோடியா..
IPL 2025
ஐபிஎல் 2025ஆம் ஆண்டின் சீசன் 18 சில நாட்களுக்கு முன் பிரமாண்ட முறையில் துவங்கியது. முதல் 5 போட்டிகளில் அனைத்து அணிகளிலும் மோதிய நிலையில், முதல் இடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிடித்துள்ளது.
வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் ஐபிஎல் போட்டிகளை கொண்டாடும் நிலையில் 10 அணிகளின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி
அதில் டாப் இரு இடங்களில் சென்னை மற்றும் மும்பை அணியினர் பிடித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி நிர்வகித்து வருகிறார்.
இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான இந்த அணி, பில்லியன் டாலர் மதிப்புள்ள பிராண்டாக வளர்ந்து, ஸ்பான்சர்ஷிப்கள், ஊடக உரிமைகள், டிக்கெட் விற்பனை மற்றும் உலகளாவிய முதலீடுகள் மூலம் பெரும் வருவாயைப் பெற்றது.
அதன்மூலம், மும்பை இந்தியன் அணியின் 2024 ஆம் ஆண்டில் 119 மில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது. 9 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 2008ல் 111.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த உரிமையை வாங்கியது. அதன்பின் உலகளாவிய கிரிக்கெட் பிராண்டாக மாறியுள்ளது.
மொத்த மதிப்பு
MI-ஐ நிர்வகிக்கும் இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடேட், FY23-ல் ரூ. 358.79 கோடியில் இருந்து FY24ல் ரூ.737 கோடியாக வருவாய் ஈட்டி, 109 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. இந்த நிதி அமைப்பு பெரும்பாலும் மத்திய வருவாய் தொகுப்புகள், ஸ்பான்ஸ்சர்ஷிப்கள் மற்றும் டிக்கெட் வருவாய் போன்றவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி 2025ன் படி 119 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வைத்து இரண்டாம் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 122 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வைத்து முதலிடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.