ஐபிஎல் 2025 தொடர் ஒத்திவைப்பு!! மீண்டும் எப்போது தெரியுமா? குஷியான ரசிகர்கள்
ஐபிஎல் 2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் பதற்றம் காரணமா இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பிலும் சில நாட்களாகவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
நமது எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான பங்காப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கை ஏற்படாக அப்போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு ரசிகர்களையும் வீரர்களை பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டி ஒத்து வைப்பதாக அறிவித்தனர்.
இதுகுறித்து மீண்டும் எப்போது ஐபிஎல் 2025 போட்டிகள் நடக்கும் என்று கேள்வி கேட்டு வந்த நிலையில், வெறும் ஒரு வாரம் மட்டுமே தள்ளி வைத்துள்ளதாக இந்தியன் ப்ரீமியர் லீக் குழு எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
🚨 News 🚨
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.