IPL2026 : ஆர்சிபி ஜெயிச்சாலும் இந்த ஆசை மட்டும் நடக்காதாம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்...
2026 ஐபிஎல் Final
2026 ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி இன்று மே 31 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளனர்.

இந்த தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.
ஆர்சிபி
கடந்த 2025 ஆம் ஆண்டு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால் மீண்டும் பெங்களூரு நகரில் நடந்துவிடக்கூடாது என்பதில் போலிசார் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிகாட்டுதல்களை பெங்களூரு போலிசார் வெளியிட்டுள்ளனர்.
என்னதான் போட்டி குஜராத் மைதானத்தில் நடந்தாலும் பெங்களூருவில் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி அசம்பாவிதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சில தடைகளை போட்டுள்ளனர் போலிசார்.

அனுமதி இல்லை
அதில், இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றாலும், பெங்களூரு நகரில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்கவோ, சாலைகளில் ஊர்வலமாக சென்று கொண்டாட்டங்களில் ஈடுபடவோ அனுமதி இல்லை. பொது மக்களுக்கு இடையூறு செய்யும் எந்தவித செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
முக்கிய சாலைகளை நோக்கி வைக்கப்படுள்ள LED திரைகளில் போட்டியை ஒளிப்பரப்பத்தடை. முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட திரைகளை அகற்ற உத்தரவிடப்படுள்ளது. மால்கள், பப்கள் அல்லது உணவகங்களுக்கு வெளியே மக்கள் திரண்டு போட்டியை பார்க்கும் வகையிலான திரைகளை வைக்கக்கூடாது.