ECR-ல வீடு 50 லட்சம் சம்பளமா.. புடவை கட்டினா பத்தினி!! கடுப்பாகிய IPL தொகுப்பாளினி..

Actress IPL 2024
By Edward Jul 01, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் சமீனா அன்வர். சமீபகாலமாக ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமீனா அன்வர், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஈர்த்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னை பற்றி கேலி செய்பவர்களால் கடுப்பாகி பேசியிருக்கிறார்.

ECR-ல வீடு 50 லட்சம் சம்பளமா.. புடவை கட்டினா பத்தினி!! கடுப்பாகிய IPL தொகுப்பாளினி.. | Ipl Anchor Sameena Anwar Reply Tesla Comments

அந்த பேட்டியில், Tesla என்று உங்களை கூறுகிறார்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இது எல்லாம் எவ்வளவு கேவலம். இதெல்லாம் மட்டமான விஷயம். சோசியல் மீடியாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். டெஸ்லான்னு கமெண்ட் வரும், என்ன தான் இருக்கும் அதில் என்ரு பார்த்தால் கார் தான் வந்தது. அதன்பின் யாரோ ஒருவர் சொன்னதை வைத்து தான் புரிந்தது. உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா?.

நான் போடும் ஆடையை என்னுடைய ஸ்டைலிஷ் கொடுக்குறாங்க, நான் போடுறேன். என் துணியில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அவரிடம் போய் கேளுங்கள். எனக்கு அந்த ஆடை பிடிக்கவில்லை என்றால் அதை அவர்களிடம் சொல்லி வேறு ஆடை தரச் சொல்லுவேன். நம்ம ஊரில் மட்டும் தான் புடவை கட்டினால் பத்தினி தெய்வம், பிகினி போட்டா காளியாம்.


புடவை கட்டினால் குத்துவிளக்குன்னு சொல்லிட்டு பேண்ட் போட்டா உடனே வேறமாதிரி சொல்லுவாங்க. பலமுறை பங்கமாக காதல் தோல்வியை சந்தித்து இருக்கிறேன். ECR-ல வீடு 50 லட்சம் சம்பளமா என்ற கேள்விக்கு, நானும் என் அம்மாவும் கஷ்டப்பட்டு, சொத்து எல்லாம் வித்து ECRல வீடு வாங்கி வாழ்ந்து வருகிறோம்

2 வருஷம் ஒரு பையனுடன் டேட்டிங் இருந்தேன். நண்பர்களாக இருந்து, பின் காதலித்தோம். அந்த பையனுக்கு 12 வருஷமாக ஒரு கேர்ல் ஃபிரெண்ட் இருந்திருக்கா.

விஜய் முதலில் சங்கீதாவுடன் சேர வேண்டும், திரிஷா ஒரு..சுசித்ரா கடும் தாக்கு

விஜய் முதலில் சங்கீதாவுடன் சேர வேண்டும், திரிஷா ஒரு..சுசித்ரா கடும் தாக்கு

அவனுக்கு மரியாதை இல்லை. நல்ல பையன் என்று நம்பினேன். அதன்பின் தான் அவனுக்கு வேறொரு காதல் இருக்கு என்று ஒருவர் கூறினார். ஒரே சமயத்தில் 2 பொண்ணை ஓட்டினான். அந்த பொண்ணை தான் இப்போது கல்யாணம் பண்ணிட்டான். எனக்கு கல்யாணமும் ஆகவில்லை, நிச்சயமும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார் தொகுப்பாளினி சமீனா அன்வர்.