IPLலில் ஒரு போட்டிக்காக அணிகளின் சியர்லீடர் அழகிகளுக்கு இவ்வளவு சம்பளமா?
ஐபிஎல் 2026
ஐபிஎல் 2026 தொடர் நாளை மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். மைதானத்தில் வீரர்களின் அதிரடியான ஆட்டம் ஒரு புறம் இருக்க, மைதானத்திற்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் கிரிக்கெட் டெயின்மென்ட் மாதிரியான முக்கிய பங்கினை சியர் லீடர்கள் திகழ்வார்கள். வீரர்களுக்கு கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கும் நிலையில் சியர் லீடர்களுக்கு ஒரு போட்டிக்கு ஊதியம் வழங்கப்படும். அவர்களுடைய பயணம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

சியர்லீடர்
சியர்லீடர்களுக்கு நிலையான ஐபிஎல் சம்பளம் எதுவும் இல்லை, அவர்களுக்கு ஊதியமானது ஒவ்வொரு ஃபிரான்சைஸ் அணியாலும் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த காலத்தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிக ஊதியம் வழங்கும் அணியாக திகழ்கிறது.

கொல்கத்தா சியர்லீடர்களுக்கு ஒரு போட்டிக்கு சுமார் ரூ. 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற பெரிய அணிகளில் உள்ள சியர்லீடர்களுக்கு சுமார் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளமாக அளிக்கின்றனர். சென்னை சூப்பர் கிங் அணியில் இந்த தொகை தோராயமாக ரூ. 17 ஆயிரம் நிர்ணயிக்கப்படுகிறதாம். பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் போன்ற ஃபிரான்சைஸ் அணிகள் ஒரு போட்டிக்கு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை அடிப்படை கட்டணமாக பொதுவாக வழங்குகின்றனர். அடிப்படை கட்டணத்தை தவிர, அணிகள் ஊக்கத்தொகைகளையும் வழங்குகின்றனர்.

அணி வெற்றி பெற்றால், ஒரு போட்டிக்கு கூடுதலாக ரூ.3 ஆயிரம் வெற்றி போனஸ் கிடைப்பது வழக்கம். கார்ப்பரேட் நிகழ்வுகள், விளம்பரப் பதிவுகள் என வெளிப்பணிகளுக்கு ஒரு சேஷனுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை கட்டணம் கொடுக்கப்படுகிறது. ஒரு முழு சீசனில், அதிலும் பிளே ஆஃப் உட்பட, ஒரு சியர்லீடர் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஃபிரைன்சைஸ் அணிகள் ஆடம்பர ஹோட்டல் தங்குமிடம், விமானக் கட்டணம், தினசரி உணவு, மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய செலவுகளையும் ஏற்றுக்கொள்வதால், இவர்களுக்கன ஊதியம் பெரும்பாலும் சேமிப்பாக இருக்கிறது.
தேர்வு
கவர்ச்சியான தோற்றம் இருந்தாலும் அவர்களின் தேர்வு செயல்முறை கடுமையாக இருக்கும். பெரும்பாலான கலைஞர்கள், ரஷ்யா, உக்ரைன், பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து வரவழைக்கப்படுவார்கள். இருந்தாலும் சமீப ஆண்டுகளாக பாங்க்ரா, லாவணி போன்ற உள்ளூர் நடன வடிவங்களை உள்ளடக்கிய இந்திய குழுக்களின் பங்கேற்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. வணீக ரீதியாக சியர்லீடிங் குழுவை நியமிப்பது வெறும் சாதாரண விஷயம் கிடையாது. இது ஒரு முக்கியமான முதலீடாம்.
ஒரு சீசனுக்கு ஃபிரான்சைஸ் அணிகளுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை செலவாகும். இந்த முதலீட் ET எட்ஜ் இன்சைட்ஸ் கணக்கின்படி டிக்கெட் விற்பனையில் 5 முதல் 7 சதவீதம் அதிகரிப்பையும் வணிகப்பொருட்கல் ஈடுபாட்டையும் கணிசமாக உயர்த்துகிறதாம். சியர்லீடர்கள் அணியும் உடை, நடன அசைவுகளில் ஸ்பான்சர் பிராண்டிங் கொண்ட ஆடையை அணிவதால் ஒரு விளம்பரமாக மாறுகிறது. 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபிஎல் வணி இயந்திரங்களில் சியர்லீடர்கள் ஒரு முக்கிய பங்காற்றுகிறார்கள். ஒரு காலத்தில் ரசிகர்கள் பாலியல் சில்மிஷத்தை தவருவதாக புகார் எழுந்தது. அதேபோல் ஆபாசமாக உடை அணிந்து அடுவதாகவும் புகார் எழுந்ததை அடுத்து ஆடைகள் விஷயத்தில் பிசிசிஐ சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
