கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ஹன்சிகா? ஷாக்கிங் செய்தி

Hansika Motwani
By Kathick Jul 20, 2025 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவர், திடீரென சினிமாவிலிருந்து பீல்ட் அவுட் ஆகியுள்ளார். மீண்டும் கம் பேக் கொடுப்பார் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஹன்சிகா கடந்த 2022ல் தனது நீண்ட நாள் காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ஹன்சிகா? ஷாக்கிங் செய்தி | Is Actress Hansika Motwani Getting Divorced

இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர்தான் இந்த சோஹைல் என்பதால், அந்த செய்தி இணையத்தில் வைரலானது. இதனால் நடிகை ஹன்சிகாவை அதிகம் ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், நடிகை ஹன்சிகா தற்போது அவரது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை ஹன்சிகா? ஷாக்கிங் செய்தி | Is Actress Hansika Motwani Getting Divorced

ஹன்சிகா மோத்வானி தனது கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, தற்போது தனது அம்மா வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது உண்மையா இல்லை வதந்தியா என்பதை ஹன்சிகாதான் விளக்கம் கொடுக்க வேண்டும்.