சினிமாவில் பட வாய்ப்புகள் பெற நடிகை கோவை சரளா இவ்வளவு கஷ்டப்பட்டாரா?
கோவை சரளா
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக்குக்கு இணையாக தன்னுடைய நகைச்சுவை திறமை வெளிப்படுத்தியவர் தான் நடிகை கோவை சரளா.
இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் உள்ளது. நகைச்சுவை நடிகையான மனோரமாவுக்கு இணையாக யாரும் வரமுடியாது என்ற சமயத்தில் மனோரமாவை மறக்க வைக்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார் கோவை சரளா.
கோவை சரளா கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் உடன் இணைந்து கவுண்டமனியை கலாய்க்கும் காட்சிகள், எவ்வாறு ஒரு நடிகை இப்படி இறங்கி நடிக்க முடியும் என யோசிக்க வைத்திருந்தது.
அதன்பிறகு இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து இருவரும் மாத்தி மாத்தி கலாய்க்கும் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர்களுக்கிடையில் ஏற்படும் அடிதடி மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருந்தது.
இதில் இயக்குனர்கள் படத்தில் கோவை சரளா வடிவேலுவை அடிக்கும் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர். அந்த நகைச்சுவையால் கோவை சரளாவிற்கு திரைத்துறையிலிருந்து பாராட்டுகள் குவிந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் எங்கு கோவை சரளா தன்னை விட அதிகம் ஸ்கோர் எடுத்து விடுவாரோ என நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படத்தில் கோவை சரளா நடிக்க கூடாது இல்லையென்றால் நான் படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் வடிவேலுவை இழக்க கூடாது என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இதன் காரணமாக கோவை சரளா பல படவாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் இன்றளவும் கோவை சரளாவின் நடிப்பிற்கு ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும், யாராலும்
கோவை சரளா இடத்திற்கு வர முடியவில்லை.