சீரியல் நடிகை மகாலட்சுமி கணவர் ரவீந்தரை விவாகரத்து செய்கிறாரா?
Ravindar Chandrasekaran
By Yathrika
பிரபல ஜோடி
திடீரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி.
என்னது இவர்கள் ஜோடிகளா, காதலித்து திருமணம் செய்தார்களா என ரசிகர்கள் பல நாட்கள் ஷாக்கில் இருந்தார்கள் என்றே கூறலாம்.
திருமணத்திற்கு பின் இவர்கள் எந்த பதிவு போட்டாலும் பிரபலமாக பேசப்பட்டார்கள்.
இடையில் அவர்களது வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளும் வந்தது. இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக ரவீந்தர் ஒரு சோகமான பதிவு போட்டார். என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என பதிவிட ஒரு ரசிகர் விவாகரத்தா என கேட்டார்.
அதற்கு ரவீந்தர், எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் பதிவு போட்டுள்ளார்.