சர்ச்சைக்குள்ளான தனுஷ் மேனேஜர் விவகாரம்!! சீரியல் நடிகை மான்யா விளக்கம்..
மான்யா ஆனந்த்
சன் டிவியில் ஒளிப்பரப்பான வானத்தைப் போல சீரியலில் நடித்து பின் அன்னம், மருமகள் போன்ற சீரியலில் நடித்து வரும் நடிகை மான்யா ஆனந்த் தான் தனுஷ் மேனேஜர் பற்றிய ஒரு விஷயத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயர் சொல்லி படவாய்ப்பு தருவதாகவும் அதற்காக ஹீரோவுடன் கமிட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறி மெசேஜ் செய்ததாக கூறினார். ஆனால் எனக்கு உண்மை எது என தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, நிறைய நடிகைகளுக்கு இதுபோல் நடந்து இருக்கிறது என்று மான்யா தெரிவித்திருந்தார்.

இது இணையத்தில் பரவி, பலரும் தனுஷ் மீதும் அவரது மேலாளர் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தான் சொன்னதை பலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விளக்கம்
அதில், அந்த நேர்காணலில், தன்னை தொடர்புகொண்ட நபர், தனுஷ் சார்பில் பேசுவதாகக் கூறியதாகவும், உண்மையில் போலி நபராக இருக்கலாம் என்பதையும், அவர் தன்னை ஸ்ரேயாஸ் என்று அறிமுகப்படுத்தி பட வாய்ப்புகளை வழங்குவதாக கூறியதாகவும், தான் தெளிவாக கூறியிருக்கிறேன்.
அந்த எண்ணை தனுஷ் குழுவுடன் பகிர்ந்து, அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்வேன் என்றும் கூறி இருந்ததாகவும், உண்மையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் மான்யா ஆனந்த் சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.