காதல், நிச்சயதார்த்தம், திருமண நிறுத்தம்... இதென்ன டிரெண்டா...
Nivetha Pethuraj
By Yathrika
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர்.
திருமண வயது வந்து சிங்கிளாக சுற்றிவந்தவர் சில மாதங்களுக்கு முன் தனது காதலர் போட்டோவை வெளியிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவித்தார்.
அடுத்து திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் சமூக பிரச்சனைகள் குறித்து நிறைய பேசி வந்தார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார், அதோடு அவரை Unfollow செய்துள்ளார். ஆனால் நிவேதா பெத்துராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

பிரபல கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.