சமந்தாவின் அடுத்த படம் ரஜினி படத்தின் காப்பியா? ரசிகர்கள் ஷாக்
நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'மா இண்டி பங்காரம்'. தமிழில் இப்படத்திற்கு 'எங்கள் தங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதையில், ஒரு ஆச்சாரமான குடும்பத்திற்கு சமந்தா மருமகளாக செல்கிறார். அவரால் ஒரு சாதாரண பெண் செய்யும் எந்த விஷயத்தையும் சரியாக செய்ய முடிவதில்லை. மேலும், தன்னுடைய பயங்கரமான கடந்த காலத்தை பற்றி அந்த குடும்பத்திடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
இந்த கதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா பாஷா பட கதை சாயலில் உள்ளதே என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 'எங்கள் தங்கம்' பட இயக்குநர் நந்தினி ரெட்டி அளித்த பேட்டியில் இந்த படம் பாஷா சாயலில் தான் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இது Spy திரில்லர் படம் எல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.