சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நாயகன் ஷாருக்கான் மகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Shah Rukh Khan Actors Bollywood
By Bhavya Sep 03, 2025 11:30 AM GMT
Report

ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று திரைப்படங்கள் ஒரே ஆண்டில் வெளிவந்தது.

இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அடுத்ததாக தனது மகளுடன் இணைந்து ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நாயகன் ஷாருக்கான் மகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Is Shah Rukh Khan Daughter Cheated Land

அதிர்ச்சியில் ரசிகர்கள் 

இந்நிலையில், தற்போது ஷாரூக்கானின் மகள் சுஹானா கான் நிலம் வாங்கியது தொடர்பான பிரச்சனை ஒன்றில் சிக்கி உள்ளார்.

அதாவது, மராட்டியத்தில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான போலீஸ் புகாரில் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.  

சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நாயகன் ஷாருக்கான் மகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Is Shah Rukh Khan Daughter Cheated Land