ஏன் யா நான் உனக்கு என்ன செய்தேன், ஏன் இப்படி பொய் சொல்ற!! கமல் குறித்து பிரபல நடிகர் ஓபன்..

Kamal Haasan Thaai Kizhavi
By Edward Mar 12, 2026 10:45 AM GMT
Report

சிங்கம்புலி

நடிகர் கமல் ஹாசனுக்கு திரைத்துறையில் பிரபலங்களும் ரசிகர்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், மணிகண்டன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கமலின் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

ஏன் யா நான் உனக்கு என்ன செய்தேன், ஏன் இப்படி பொய் சொல்ற!! கமல் குறித்து பிரபல நடிகர் ஓபன்.. | Why Didnt You Come To Meet Me Kamal Ask Singampuli

அவர்களை போல் அந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான் நடிகர் சிங்கம்புலி. தாய் கிழவி படத்தில் கமலின் ரசிகராக நடித்து அசத்திய அவர், ரியல் வாழ்க்கையில் கமலை நேரில் சந்தித்த அனுபவம் குறித்து படத்தின் சக்சஸ் மீட்டில் பேசியுள்ளார்.

ஏன் யா நான் உனக்கு என்ன செய்தேன், ஏன் இப்படி பொய் சொல்ற!! கமல் குறித்து பிரபல நடிகர் ஓபன்.. | Why Didnt You Come To Meet Me Kamal Ask Singampuli

கமல் ஹாசனை இதுவரை நேரில் பார்த்ததில்லை என்று இப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் கூறியிருந்தேன். அதை அவரும் பார்த்திருப்பார் போல. சில நாட்களுக்கு முன்பு ஒரு போனில் இருந்து கால் வந்தது. அதில் கமல் ஹாசனை பார்க்க வாருங்கள் என்று கூறினர்.

நான் உடனே ஏன் யா நான் உனக்கு என்ன செய்தேன், ஏன் இப்படி பொய் சொல்ற என்று கூறி நம்பவே இல்லை. ஆனால் உண்மையில் வர சொல்லியிருந்தார்கள். அவரை போய் பார்த்தபோது ஏன் என்னை பார்க்கவில்லை வந்திருக்கலாமே என பல விஷயம் பேசினார் கமல் என்று சிங்கம்புலி தெரிவித்துள்ளார்.