என்னது சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?.. வெளிவந்த அதிரடி அறிக்கை

Suriya Tamil Cinema Tamil Actors
By Bhavya Aug 21, 2025 01:30 PM GMT
Report

சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி இருந்தது, அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது, சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சூர்யா அவரது அகரம் பவுண்டேஷன் மூலம் பல நல்ல விஷயங்கள் செய்து வருகிறார்.

என்னது சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?.. வெளிவந்த அதிரடி அறிக்கை | Is Suriya Going To Join Politics

அதிரடி அறிக்கை

இந்நிலையில், சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக தொடர்ந்து செய்திகள் வலம் வர, இதற்கு சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், " வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

சினிமா, மற்றும் அகரம் சூர்யாவுக்கு இப்போதைய போதுமான நிறைவைத் தந்துள்ளது" என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.