குக் வித் கோமாளி 7வது சீசனில் இந்த பிக்பாஸ் பிரபலம் கலந்துகொள்கிறாரா?

Cooku with Comali Tamil TV Shows
By Yathrika Feb 06, 2026 05:01 PM GMT
Report

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி.

சமையல் ப்ளஸ் கலாட்டா என புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தமிழை தாண்டி கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தற்போது தமிழில் குக் வித் கோமாளி 7வது சீசன் வரும் மே மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில் இதில் பங்குபெறப்போகும் ஒரு போட்டியாளர் என ஒரு தகவல் வலம் வருகிறது.

அதாவது பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் குக் வித் கோமாளியில் பங்குபெற இருப்பதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி 7வது சீசனில் இந்த பிக்பாஸ் பிரபலம் கலந்துகொள்கிறாரா? | Is This Bigg Boss Contestant Participating In Cwc