விஜய் மகனுக்கு இப்படியொரு சோதனையா..? முதல் படம் ட்ராப் ஆகிவிட்டதா
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் தனது இயக்குநராக என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படமே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக, தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் தான் நடந்ததா என பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதற்கிடையில், இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என பேச்சு எழுந்துவிட்டது.
ஆனால், உண்மையில் படம் ட்ராப் எல்லாம் ஒன்றும் இல்லை. இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்கவுள்ளது. லைகா நிறுவனத்திடம் இருந்து First Copy அடிப்படையில் ரூ. 25 கோடி இப்படத்திற்கான பட்ஜெட்டை சஞ்சய் வாங்கிவிட்டாராம்.
இதனால் படப்பிடிப்பிற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும், படம் கைவிடப்பட்டது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டள்ளது.