அம்பானி மகள் இஷாவின் 2வயது மகள் ஆத்யாவின் பள்ளிக்கட்டணம்!! எந்த ஸ்கூல் தெரியுமா?
அம்பானி மகள் இஷா
இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல், பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார். இஷா அம்பானி கடந்த 2018ல் அஜய் பிரமல் என்பவரை திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது இஷாவின் இரட்டையர்கள் தங்களின் கல்லிப்பயணத்தை துவங்கியுள்ளனர். ஆதியா, மும்பையில் உள்ள வெஸ்ட் விண்ட் பள்ளியில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். வெஸ்ட் விண்ட் பள்ளியின் கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளிக்கட்டணம்
ஒருமுறை சேர்க்கை கட்டணம் ரூ. 12 ஆயிரம். திரும்ப பெறக்கூடிய எச்சரிக்கை வைப்புத்தொகை ரூ. 5 ஆயிரம் மற்றும் திரும்பப்பெற முடியாத பதிவு கட்டணம் ரூ. 1000. ஒரு மாதத்திற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 3500, ஆண்டுக்கான கட்டணம் ரூ. 42 ஆயிரம். கூடுதல் ஆண்டு கட்டணமாக ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
மொத்த ஆண்டு செலவாக ஒரு குழந்தைக்கு அப்பள்ளியில் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை வசூலிக்கிறார்களாம். உடன்பிறப்புகளுக்கான கல்விக் கட்டணத்தில் 10% தள்ளுபடி மற்றும் முழு ஆண்டு முன்கூட்டியே செலுத்துவதற்கு 5% சலுகை உள்ளிட்ட தள்ளுபடிகளும் இந்த பள்ளியில் கிடைக்கிறதாம்.
