சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! சிவகார்த்திகேயனுக்கே அதிர்ச்சி கொடுத்த புவனேஷ்

Sivakarthikeyan Zee Tamil Saregamapa Lil Champs
By Edward May 15, 2025 12:30 PM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகினர். மே 11 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சி நடைபெற்றது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! சிவகார்த்திகேயனுக்கே அதிர்ச்சி கொடுத்த புவனேஷ் | Saregamapa Sivakarthikeyan S Unexpected Bhuvanesh

சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார்.

மேலும் இரண்டாம் இடம் யோகஸ்ரீயும், 3வது இடம் ஹேமித்ராவும் பிடித்தனர். இறுதி போட்டியாளர்கள் பாடி அசத்தி இருந்தாலும் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ல் கலந்து கொண்ட சில போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் பாடியிருந்தனர்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! சிவகார்த்திகேயனுக்கே அதிர்ச்சி கொடுத்த புவனேஷ் | Saregamapa Sivakarthikeyan S Unexpected Bhuvanesh

புவனேஷ்

அப்படி அனைவரது கவனத்தையும் ஈர்த்த குட்டிப்பையன் புவனேஷ் சிவகார்த்திகேயனிடம் ஒரு விஷயம் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். சார் உங்ககிட்ட விஜய் சார் துப்பாக்கி கொடுத்துட்டு போனாரே அந்த துப்பாக்கிய எப்போ எனக்கு தரப்போறீங்க என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார் புவனேஷ்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! சிவகார்த்திகேயனுக்கே அதிர்ச்சி கொடுத்த புவனேஷ் | Saregamapa Sivakarthikeyan S Unexpected Bhuvanesh

அதற்கு சிவகார்த்திகேயன் ஒரு நிமிஷம் ஷாக்காகி சிரித்தப்பின், நீ இங்க இருந்து பார்க்கும்போது உன் உருவம் எனக்கு தெரியல, ஆனா என்கிட்ட இருக்க துப்பாக்கி பெருசா இருக்கு, அதை உனக்கு நீ வளர்ந்தப்பின் தரேன், இப்போ அந்த துப்பாக்கியை வச்சிக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல. அதனால கொடுக்கல என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.