புது கடைக்கு பூஜை போட்ட நீதா அம்பானி!! கவனத்தை ஈர்க்கும் இஷா அம்பானியின் ஆடை..
முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீதா அம்பானி அணியும் சேலை, நகைகள் என்று பல பொருட்கள் அதிக கவனத்தை ஈர்க்கும்.
அந்தவகையில் நீதா அம்பானி, Swadesh new store என்ற கடை ஒன்றை மும்பையில் வரும் ஜூலை 25ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. அதற்கான பூஜைகள் நடந்து வருகிறது.
இஷா அம்பானியின் ஆடை
அம்பானியின் மருமகள்கள் ஸ்லோகா, ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் மகள் இஷா அம்பானி இந்நிகழ்வில் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.
இதனை அடுத்து அம்பானி மகள் இஷா அம்பானி பல வருட பாரம்பரியமான பல மாதங்கள் கையால் நையபட்ட Roberto Cavalli Couture ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரின் சிகப்பு நிற கவுனில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.




