இஷான் கிஷன் கேர்ள்பிரண்ட் விவகாரம்..தாத்தாவுக்கு வயசாகிடுச்சு!! அம்மா கொடுத்த ரியாக்ஷன்..

Gossip Today Indian Cricket Team Ishan Kishan T20 World Cup 2026
By Edward Feb 18, 2026 02:45 PM GMT
Report

இஷான் கிஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான இஷான் கிஷன் தற்போது முழு ஆட்டத்தை உலக கோப்பை 2026 போட்டிகளில் கொடுத்து வருகிறார். இதற்கிடையில் இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே, அளித்த பேட்டியொன்றில் பேரனின் காதல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

இஷான் கிஷன் கேர்ள்பிரண்ட் விவகாரம்..தாத்தாவுக்கு வயசாகிடுச்சு!! அம்மா கொடுத்த ரியாக்ஷன்.. | Ishan Kishan Mother Denies Claims About Girlfriend

அதில், இஷான் கிஷன் யாரைத்திருமணம் செய்ய விரும்புகிறாரோ, அவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வோம். அதிதி ஹுண்டியா இஷானின் தோழி, ஒரு மாடல்.

குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை ஏற்றுக்கொள்வதுதான் பெரியவர்களின் கடமை என்று கூறியிருந்தார். இந்த தகவல் இணையத்தில் பரவ, இஷான் கிஷனின் தாயார் சுசித்ரா தேவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஷான் கிஷன் கேர்ள்பிரண்ட் விவகாரம்..தாத்தாவுக்கு வயசாகிடுச்சு!! அம்மா கொடுத்த ரியாக்ஷன்.. | Ishan Kishan Mother Denies Claims About Girlfriend

தாயார் சுசித்ரா

அதில், இது இஷான் கிஷன் திருமணம் பற்றி பேசும் நேரம் இல்லை. அவர் இப்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும், திருமணம் பற்றிப்பேசும் அளவிற்கு அவருக்கு வயதாகிவிடவில்லை.

தாத்தாவுக்கு சற்று வயதாகிவிட்டது. வயதானவர்கள் எப்போது கொஞ்சம் அதிக உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். இணையதளத்தில் வரும் செய்திகள் பொய்யான தகவல், சோசியல் மீடியாக்களில் ஏதாவதொன்று வந்துக்கொண்டே தான் இருக்கும் என்று கூறும் அளவிற்கு பேசியுள்ளார் இஷான் கிஷனின் தாயார்.