கடந்த ஆண்டு விவாகரத்து!! திருப்பதி சாமி தரிசனத்தை முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை, 2004ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன்பின் கணவரை வைத்து 3 படத்தினை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் மகன்கள் வளர்ந்தப்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனுஷை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். சட்டரீதியாக இருவரும் நீதிமன்றம் சென்ற நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இருவரும் விவாகரத்தை சட்டரீதியாக பெற்றனர்.
இந்நிலையில், தன்னுடைய தந்தையை போல் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, சிலநாட்களுக்கு முன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அவர் சென்ற போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்தது. ஒருவேளை சினிமா வாழ்க்கை பற்றியோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ குட் நியூஸ் சொல்வாரா? என்ற கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.