இயக்குநர் பாலா அஜித்தை அடித்தது உண்மையா? பில்லா பட தயாரிப்பாளர் ஓபன் டாக்..

Ajith Kumar Gossip Today Bala Tamil Producers
By Edward Feb 12, 2026 07:45 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க கார் ரேஸில் அதிக ஈடுபாட்டை அஜித் செலுத்தி வரும் நிலையில், அஜித் பற்றிய ஒரு தகவலை பில்லா பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தரருமான எல் சுரேஷ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா அஜித்தை அடித்தது உண்மையா? பில்லா பட தயாரிப்பாளர் ஓபன் டாக்.. | It Is True That Ajith Bala Had An Argument Issues

அஜித்திற்கும் இயக்குநர் பாலாவுக்கு என்ன பிரச்சனை, அஜித்தை பாலா அடித்தாரா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில், பில்லா படத்தின் போது அஜித் எனக்கு படம் பண்றேன் என்று கூறியதும் எனக்கு ஷாக்காகிவிட்டது.

உடனே ஏவிஎம் சரவணன் சாரை நேரில் சென்று சந்தித்தபோது, நான் பணம் தருகிறேன் என்று பில்லா படத்தை எடுக்க முடிவெடுத்தோம். அப்போது நான் கடவுள் படத்திற்காக, அஜித் நிறைய முடி வளர்க்க வேண்டும் என்று பாலா கூறிய பிரச்சனை சென்றது.

இயக்குநர் பாலா அஜித்தை அடித்தது உண்மையா? பில்லா பட தயாரிப்பாளர் ஓபன் டாக்.. | It Is True That Ajith Bala Had An Argument Issues

அஜித் - பாலா

அப்போது பாலா, அஜித்துடன் நடந்த விநியோகஸ்தர்கள் சந்திப்பில் நானும் இருந்தேன். வாக்குவாதங்கள் நடந்ததே தவிர அடிதடி நடந்தது என்று பேப்பரில் போடுகிறார்களே அதெல்லாம் ஒன்றும் இல்லை, பொய்.

பாலாவுக்கு அதிகமாக கோபம் வரும், 5 மாசம், 6 மாசம் காத்திரு என்று அஜித் சொன்னார். பாலாவும் எவ்வளவு நாள் காத்திருப்பார். அதனால் இருவரும் வெளியில் வந்துவிட்டார்கள், வாக்குவாதம் நிறைய நடந்தது என்று தயாரிப்பாளர் எல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.