தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. எல்லாத்துக்கும் அமெரிக்க அதிபர் தான் காரணம்..
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை ஏறுவதற்கும் குறைவதற்கும் முக்கிய உலகளாவிய காரணங்களில் ஒன்றாக இருப்பது அமெரிக்கா. தங்கத்தின் விலை எவ்வளவு என்பதை நிர்ணயிக்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
அப்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகளை உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகள் கவனித்து வருவதன் காரணமாகத்தான் தங்கம் விலை பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கத்தைப்போல் அதிக லாபம் தருவதாக இருப்பது அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் பொருளாதார வலிமையே அதற்கான காரணம். அந்தவகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் அளவிற்கு 2வது முறையாக குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர்
பொதுவாகவே வட்டி விகித குறைப்பு என்பது தங்கத்தின் விலையில் தான் அதிகரிக்கும். ஆனால் அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதன் காரணமாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
திங்களன்று தங்கத்தின் விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க அரசின் நிதிக்கொள்கை, வட்டிவிகிதக் குறைப்பு போன்றவை ஒருபுறம் எனில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிதான் தங்கத்தின் விலை தற்போது சரிவுக்கு காரணமாக இருக்கிறதாம்.
அதாவது, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.56,680க்கு விற்பனையாகிறது. இதனால் தங்கத்தை வாங்குவோர் இப்போது சென்று தங்கத்தை வாங்கிடுங்கள் என்று கருத்துக்கள் எழுந்து வருகிறது.