அனந்த் அம்பானி-க்கு பார்த்து பார்த்து செய்யப்பட்ட வாட்ச்!! இத்தனை கோடியாம்?
அனந்த் அம்பானி
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 18வது இடத்திலும் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி.
தன்னுடைய குடும்பத்தை பிரமாண்டமான முறையில் வழிநடத்தும் முகேஷ் அம்பானி, கடந்த 2024 ஆம் ஆண்டு தன்னுடைய மகன் அனந்த் அம்பானிக்கு பிரமாண்டமான முறையில் பல கோடி செலவில் திருமணத்தை நடத்தி வைத்தார். ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பங்காக இருந்து வரும் அனந்த் அம்பானி, வாட்ச் கலெக்ஷன் வைத்திருப்பது பலரும் தெரியும்.

வாட்ச்
அந்தவகையில், பிரபல ஆடம்பர கைக்கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ நிறுவனம் அனந்த் அம்பானியை பாராட்டி பிரத்யேக கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த அடம்பர கைக்கடிகாரத்தில் டயலின் மத்திய பகுதியில் அனந்த் அம்பானியின் மினியேச்சர் உருவம் வைக்கப்பட்டுள்ளது. பச்சைநிற சட்டையணிந்து அமரும் வகையில் அந்த உருவம் பதிக்கப்பட்டுள்ளது.

அந்த மினியேச்சர் உருவத்தின் மையத்தில் இருக்க அருகிலேயே சிங்கம், புலி உள்ளிட்ட விலங்கினங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 400 அரியவகை கற்களை அடிப்படையாக கொண்டு இந்த கைக்கடிக்காரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் விலையாக ரூ. 12.5 கோடியாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.