அந்த ஆடை விளம்பரத்தையும் விட்டுவைக்காத பிரபல நடிகை!! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..
பொதுவாக சினிமா நடிகர்களை விட விளம்பர படங்களில் அதிகளவில் நடிகைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். ஆடை, அணிகலன் முதல் விலையுயர்ந்த பொருட்கள் வரை நடிகைகளின் விளம்பரங்களே அமையும்.
ஆனால் ஆண்களின் உள்ளாடை விசயத்தில் மட்டும் தான் அதிகமாக நடிகைகளை ஈடுபடுத்தாமல் இருந்தார்கள். ஆனால் தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களே என்று நெட்டிசன்கள் பிரபல நடிகை வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்காகியுள்ளனர்.
பாலிவுட் நடிகையாக இருப்பவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஆண்களின் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளார் ஜாக்குலின். ஆண் போட்டுள்ள ஆடையை மட்டும் காட்டிவிட்டு முழுக்க முழுக்க ஜாக்குலின் முகத்தை தான் காட்டியிருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு நடிகை ஆண்களின் உள்ளாடைக்கு விளம்பரப்படுத்தி இருக்கும் ஜாக்குலினை கிண்டல் செய்து வருகிறார்கள்.