பணப்பெட்டியை எடுக்க சென்று வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Jan 16, 2025 02:30 AM GMT
Report

இறுதி வாரத்தை எட்டியுள்ள பிக் பாஸ் 8ல் தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுவும், இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் நடக்காத வகையில், பணப்பெட்டியை எடுக்கும் நபர், போட்டியை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீட்டிற்கு வெளியே இருக்கும் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வரவில்லை என்றால், அந்த போட்டியாளர் வெளியேறிவிடுவார். முதல் நபராக களமிறங்கி ரூ. 50,000 கைப்பற்றினார் முத்துக்குமரன். அவரை தொடர்ந்து களத்தில் இறங்கிய ரயான் மற்றும் பவித்ரா ரூ. 2 லட்சத்தை எடுத்தார்.

பணப்பெட்டியை எடுக்க சென்று வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Jacqueline Mid Week Eviction In Bigg Boss 8

இவர்களை தொடர்ந்து பணப்பெட்டியை எடுக்க சென்ற ஜாக்குலின், பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் வீட்டிற்குள் வரவில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

14 வாரங்கள் நாமினேட் ஆகி, மக்களால் காப்பாற்றப்பட்ட ஜாக்குலின், தற்போது வெளியேறியுள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பணப்பெட்டியை எடுக்க சென்று வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Jacqueline Mid Week Eviction In Bigg Boss 8