ஜெய் பீம் படத்தின் ஹிந்தியில் பேசுபவரை அடிக்கும் காட்சி...நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி பேட்டி!

jai bhim Prakash Raj
By Jeeva Nov 06, 2021 01:30 PM GMT
Report

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் படம் நேரடியாக OTT தலமான அமேசான் ப்ரைமில் வெளியாகி எல்லா தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் போலீஸாக வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஹிந்தியில் பேசும் நகைக்கடை காரரை கன்னத்தில் ஆறையும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. ஹிந்தி ஆதரவாளர்கள் மத்தியில் இது பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரகாஷ்ராஜ் இதுகுறித்த கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்திருக்கிறார்.

அவர், 'ஜெய் பீம்’ போன்ற படத்தைப் பார்த்துவிட்டு, பழங்குடியின மக்களின் வேதனையைப் பார்க்கவில்லை, அநியாயத்தைப் பார்த்து பரிதாபப்படாமல், அறைந்ததைத்தான் பார்த்தார்கள். அவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்; இது அவர்களின் மனநிலையை அம்பலப்படுத்துகிறது', என கூறியிருக்கிறார்.