மேடையில் ரசிகைகளால் மொக்கை வாங்கிய நடிகர் ஜெய்!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் ஜெய்.
இப்படத்தினை தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கனிமொழி, எங்கேயும் எப்போதும், வடகரி, வலியவன், பலூன், கேப்மாரி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார்.
இடையில் நடிகை அஞ்சலி மற்றும் வாணி போஜனுடன் காதலில் இருந்து வந்ததாகவும் செய்திகள் பரவி சர்ச்சையில் சிக்கினார். சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வராமல் இருப்பது என்று பல பிரச்சனையிலும் சிக்கி வந்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் தீராக்காதல் படம் வெளியானது. ஓரளவிற்கு வரவேற்பை பெற்று அப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளை படக்குழுவினரும் கலந்து கொண்டார் ஜெய்.
ஒரு பேட்டியில் தொகுப்பாளினி, ஜெய்க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் என்று கேட்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் யாரும் கையை தூக்காமல அமைதியாக இருந்தனர்.
இதனால் மொக்கை வாங்கிபடி ஏமாற்றத்துடன் ஜெய் முகம் மாறியது. உடனே நெட்டிசன்கள் இதை வைத்து வீடியோவாக பதிவிட்டு ஜெய்யை கலாய்த்து வருகிறார்கள்.
Adeii?? pic.twitter.com/499Q2COMDk
— Aryan (@Pokeamole_) July 4, 2023