நான் செய்த தவறால் தான் மனைவியுடன் விவாகரத்து..யாரும் இல்ல!! ஜெயிலர் விநாயகன் ஓபன்..
விநாயகன்
மலையாள சினிமாவில் தன்னுடைய நடிப்புத்திறமையால் டாப் நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லன் ரோலில் நடித்து மிரட்டிய அவர், பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

கடந்த 2025 ஜனவரி மாதம் கொச்சி கலூரிலுள்ள அவரின் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்தது வரை பல சர்ச்சைகளை செய்து வந்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
நான் செய்த தவறால்
அதில், எனக்கு ஒரு மனைவி இருந்தாள், ஆனால் இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம், எங்களுக்கு குழந்தைகள் இல்லை, சண்டைகள் எதுவும் இல்லை, ஆனால் எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
நான் மனம் திறந்து பேச வேண்டிய ஒரே நபர் என் மனைவிதான், இப்போது அப்படி யாரும் எனக்கு இல்லை. என் தவறால்தான் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார். என்னால் இதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தனியாக, நொறுங்கிப் போயிருக்கிறேன். என்னால் வெளியே செல்லவும் முடியவில்லை.

அது என் பிரச்சனை, அவளுடையது இல்லை. அவள் இன்னும் என் எல்லாப் பொருட்களையும் பார்த்துக் கொள்கிறாள். பிரிந்து செல்வதே நல்லது என்று எனக்கு தோன்றியது, இல்லை என்றால் என் மனைவிக்கு பிரச்சனையாகிவிடும். நான் அவரின் நிம்மதியை கெடுக்கப் போவதில்லை, அவரின் வாழ்க்கையை அவர் வாழட்டும், இதுதான் அவருக்கும் எனக்கும் நல்லது.
ஒன்றாக வாழ முடியாத நிலையின்போது, பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவெடுத்தோம், என்றாலும் என் மனைவியிடம் மட்டுமே என்னுடைய மனக்குமுறல்களை காட்ட முடியும், அவரிடம் இருந்து ஏற்பட்ட அந்நியப்படுதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் இருண்ட காலக்கட்டத்திற்கு என்னைத் தள்ளியது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் விநாயகன்.