ஜெயிலர்-ம் காப்பி, வாரிசு-ம் காப்பியா? சொந்தமா எடிட் பண்ணாமல் ஏமாற்றும் இயக்குனர்கள்..

Rajinikanth Vijay Nelson Dilipkumar Jailer Varisu
By Edward Jun 21, 2022 05:10 PM GMT
Report

பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் அப்டேட் வந்தால் பெரியளவில் பேசப்படுவதோடு அதன் தொடர்பாக இருக்கும் சில விசயங்கள் பலர் கண்டுபிடித்து இணையத்தில் பரப்பி வருவார்கள்.

அப்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் படத்தினை நெல்சன் இயக்கத்தில் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தின் டைட்டிலுக்கு பின் அமைக்கப்பட்ட பேக்ரவுடன் புகைப்படம் கூகுளில் இருந்து காப்பி அடித்துள்ளதாக பலர் விமர்சித்து புகைப்படத்தை வைரலாக்கினார்கள்.

அதேபோல் இன்று வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த படத்தில் விஜய் உட்கார்ந்திருப்பதற்கு பின்னால் இருக்கும் புகைப்படம் கூட ஒரு இணையத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் என்று கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.


GalleryGalleryGallery