எஸ் பிபி நினைவு நாளில் பேசிய இசைஞானி! இருக்கும் போது நோகடித்து என கூறிய ஜேம்ஸ் வசந்தன்..

ilayaraja spb jamesvasanthan spBalasubrahmanyam
By Edward Sep 28, 2021 11:05 AM GMT
Report

இந்திய சினிமாவில் பாடலில் ஜாம்பவான் எனப பேர் பெற்று பல விருதுகளை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலை பல மொழிகளில் கொடுத்துவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 25ல் மாரடைப்பால் உயிரழிந்தார் எஸ் பி பாலசுப்ரமணியம். இளையராஜா உள்ளிட்ட பல இசை ஜாம்பவான்களுடன் பயணித்த எஸ்பிபி மறைந்து ஒரு ஆண்டுகளாகிய நிலையில் அவரது நினைவு தினத்தன்று இசைஞானி இளையராஜா பேசியுள்ளார்.

அதில் பாலு உனக்காக காத்திருக்கிறேன் என்ற வீடியோவை சரண் போட்டுக்காட்டியபோது ராஜாவை வரச்சொல் என்று கூறினான் எஸ்பிபி. அந்தநேரத்தில் என்னை மட்டும் பார்க்க கூறியது வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் என்று தோன்றியது என கூறியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கலாய்க்கும் படியான பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில், ஒருவன் உயிருடன் இருக்கும் போது அவனை நொகடித்தும், புண்படுத்திவிட்டு இப்போது அவன் இல்லையென்றானவுடன், அவனைப்போல் ஒருவன் இல்லை என்று பேசுவது என்ன ஒரு மாய் மாலம்! நேற்று எஸ்பிபி நினைது தினம் என்று கூறியுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் மறைமுகமாக இளையராஜாவை சாடி பேசியதும் ரசிகர்கள் அதற்கு கருத்துக்களையும் கூறி வருபதுமாக இருக்கிறார்கள்.

எஸ் பிபி நினைவு நாளில் பேசிய இசைஞானி! இருக்கும் போது நோகடித்து என கூறிய ஜேம்ஸ் வசந்தன்.. | James Vasanthan Trolled Illayaraja About Spb Death