முகத்தில் தினமும் கரண்ட் ஷாக்!! வாய்ப்பில்லாமல் அமெரிக்காவில் செட்டிலாகிய நடிகர் ஜனகராஜ்
சினிமாவில் தனக்கென ஒரு பாடி லேங்குவேஜ் வைத்து காமெடி நடிகராக ஜொலித்து வந்தவர் நடிகர் ஜனகராஜ். ஆரம்பத்தில் வையலின் வாசித்து வந்த ஜனகராஜ் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நேரத்தில் முகத்தில் விபத்துக்குள்ளாகி முக வாதம் என்ற நோய் ஏற்பட்டது.
அதற்காக ஜனகராஜ் தினமும் முகத்தில் கரண்ட் ஷாக் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தன்னுடைய முகம் வீங்கி வேறுமாதிரியான தோற்றத்தை கொடுத்தது. சினிமாவில் நடிக்க முகம் முக்கியம் என்று பலர் ரிஜெக்ட் செய்துள்ளனர்.
ஆனால் தன்னுடைய அந்த முகத்தை தன்னுடைய பிளஸ்-ஆக மாற்றி தன்னுடைய மாடுலேஷன், பாடி லேங்குவேஜாகவே உருவாக்கி நடித்தார் ஜனகராஜ். அப்படி அவரை மாற்றினாலும் முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையை நினைத்து வருந்தியும் இருக்கிறார்.
அப்போது அவரை கவனிக்க இயக்குனர் பாரதிராஜா, தன்னுடைய உதவி இயக்குனரான மனோபாலாவை வைத்து கவனித்துக்கொண்டே இருந்துள்ளாராம். அந்தசமயத்தில் ரஜினி, கமல் படத்தில் கவுண்டமணி நிலைத்திருந்த நிலையில் போகப்போக கவுண்டமணி கவுண்டர் இருவருக்கும் பிடிக்காமல் போனது.
கவுண்டமணிக்கு மாற்று நடிகராக ரஜினி, கமல் படங்களில் காமெடியன் இடத்தை நிரப்பினார் ஜனகராஜ். அதன்பின் ஒரு கட்டத்தில் கரண்ட் ஷாக் எடுத்துக்கொண்டதால், நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற சிக்கல்களை உடலில் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஓய்வுக்காக அமெரிக்காவில் மகனுடன் செட்டிலாகிவிட்டார். பல ஆண்டுகள் கழித்து தான் விஜய் சேதுபதி அமெரிக்காவிற்கே சென்று 96 படத்தில் நடிக்க வைத்துள்ளார்.