விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நீதிபதி!! ஜனநாயகன் எப்போ ரிலீஸ்

Vijay Gossip Today JanaNayagan
By Edward Jan 09, 2026 06:00 AM GMT
Report

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் நாளை ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் பிரச்சனை முடியாததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நீதிபதி!! ஜனநாயகன் எப்போ ரிலீஸ் | Jananayagan Censor Case High Court Verdict

தணிக்கை சான்றுதழ் வழங்குவதில் சிக்க ஏற்பட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கு, இன்று காலை, 10.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பி.டி. தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதாவது, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. மேலும் மறுத்தணிக்கைக்கான உத்தரவையும் அவர் ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்பை எதிர்த்து தணிக்கை குழு மேல்முறையீடு கேட்டதற்கு, முதலில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள், பின் எப்போது விசாரணை என்பதை நாங்கள் சொல்கிறோம் என்று நீதிபதி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நீதிபதி!! ஜனநாயகன் எப்போ ரிலீஸ் | Jananayagan Censor Case High Court Verdict

இதனடிப்படையில், படத்தை வரும் 11 அல்லது 12 ஆம் தேதிகளிலோ அல்லது 14 ஆம் தேதியோ படத்தை ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை குழு மேல்முறையீட்டால் தற்போது படம் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.