முன்பதிவில் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா ஜனநாயகன்.. அடேங்கப்பா
Vijay
JanaNayagan
By Kathick
ஜனநாயகன் படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். வருகிற ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதற்கான வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் மட்டுமே இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்துவிட்டது என கூறப்படுகிறது.