ரூ. 634 கோடி ஊழல் புகார் விவகாரம்..எனக்கு தொடர்பு இல்லை!! ஜனனி அசோக்குமார் வேதனை..
ஜனனி அசோக்குமார்
முன்னாள் அமைச்சர் கே என் நேரு சம்பந்தப்பட்ட ரூ.634 கோடி ஊழல் புகார் விவகாரம் மற்றும் 163வது குற்ற வழக்குடன் நடிகை ஜனனி அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறி இரு நாட்களாக சோசியல் மீடியாக்களில் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையறிந்த ஜனனி அசோக் குமார், தனக்கும் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 2 நாட்களாக சோசியல் மீடியாக்களிலும், குறிப்பாக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் என்னைப் பற்றியும் என்னுடைய பெயரை 163-வது குற்ற வழக்குடன் தொடர்புப்படுத்தியும் பல குற்றச்சாட்டுகளும் கதைகளும் பரவி வருவதை நான் கவனித்து வருகிறேன். இதை நான் மிகத்தெளிவாக கூற விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, நான் எப்போதும் அரசியல் சார்பற்ற நபராகவே இருந்து வருகிறேன். எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததே இல்லை.
அரசியல் தலைவர்களுடன் எனக்கு தனிப்பட்ட நட்புறவுகள் இருந்திருக்கலாம், ஆனால் தற்போது பரப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அனை என்னுடைய வாழ்க்கை முறையையோ, தனிப்பட்ட நம்பிக்கைகளையோ பிரதிபலிக்கவில்லை. நான் கேட்க விரும்புவது ஒன்றுதான், உண்மை, உண்கைகளை சரிபார்க்காமல், ஆதாரஙலை உறுதி செய்யாமல், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்காமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எப்படி பகிர முடிகிறது.
ஒருவரைப்பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் பரப்புவது, அவரது நற்பெயருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது மட்டுமே, ஒருவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரமாகிவிடாது.

இத்துறையில் நான் பல ஆண்டுகளாக கண்ணியத்துடனும், நற்பெயருடனும் என்னுடைய வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் உருவாக்கி வந்துள்ளேன். என்னை ஆதரிக்க யாரும் இல்லாத சூழ்நிலையில், என்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் இந்நிலையை அடைந்துள்ளேன். எனவே இக்குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் பாதிக்கிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல், ஒருவரின் வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் களங்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற கதைகள் உருவாக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னைப்பற்றி அறிந்தவர்கள், இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவி என்பதை அறிவார்கள். இருந்தாலும், உண்மையை தெரிந்துகொள்ளாமல் சிலர் இதுபோன்ற தகவல்களை நம்பி வருவது வேதனை அளிக்கிறது. என்னுடைய வாழ்க்கை முறையையோ, என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையையோ நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை, ஆனால் ஒரு பெண்ணாக, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் யாருக்கும் எளிதில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை நினைக்கும்போது, மற்றொரு பெண்ணுக்கு இதுபோன்ற நிலை ஏற்படுவதற்கு முன் உண்மையை சரிபார்க்க வேண்டும்.

எந்தவொரு தகவலையும் வெளியிடுவதற்கு முன் அல்லது பகிர்வதற்கு முன், ஊடக நிறுவனங்கள், இணையவாசிகள் அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உண்மையான செய்திகளாக கருதவேண்டாம். எனக்கு ஆதரவகவும் இந்த கடினமான நேரத்தில் என்னை புரிந்து கொண்டு துணை நிற்பவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உண்மை முக்கியம், ஆதாரங்கள் முக்கியம், அதேபோல் ஒருவரின் கண்ணியமும் முக்கியம் என்று அந்த அறிக்கையில் ஜனனி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.