இயக்குனரை அதை மாத்த சொல்லி டார்ச்சர் செய்த நடிகை ஜனனி!! அதிர்ச்சி கொடுத்த பத்திரிக்கையாளர்..

Janani Iyer Tamil Actress Actress
By Edward Apr 07, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் படம் HOT Spot. ஆரம்பத்தில் டிரைலர் வெளியான போது முகம் சுளிக்க வைக்கும் படியாக இருக்கிறது என்று பலர் விமர்சித்தும் பத்திரிக்கையாளர் சரமாரியான கேள்விகளை கேட்டும் வந்தனர். பிரஸ் மீட்டில் கூட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கை கடுமையாக விமர்சித்தபடி கேள்விகளை கேட்டனர். சில தினங்களுக்கு முன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனரை அதை மாத்த சொல்லி டார்ச்சர் செய்த நடிகை ஜனனி!! அதிர்ச்சி கொடுத்த பத்திரிக்கையாளர்.. | Janani Iyer Reply Hotsopt Movie Issues Answers

இந்நிலையில் ஹாட் ஸ்பாட் படக்குழுவினர் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். படத்தில் நடித்த நடிகை ஜனனி, மேடையில் பேசிய போது, இயக்குனர் நிறைய முறை டார்ச்சர் செய்திருக்கிறேன். கதை கேட்கும் போது, செட்டில் நிறைய டயலாக்கை மாற்ற சொல்லி நிறைய டார்ச்சர் செய்தேன் என்று எனக்கு தெரியும்.

அப்படியிருந்தும், என்னை நம்புங்கள் என்று கூறி பலவற்றை மாற்றினார். நான் சொன்னபடியே படத்தில் சரியாக வைத்திருக்கிறார் என்று ஜனனி கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஜனனியிடம் ஒருசில டயலாக்கெல்லாம் என்னால் பேசமுடியவில்லை, அதெல்லாம் மாத்த சொன்னேன் என்று கூறினார். அப்படி என்ன டயலாக் வல்கரா கொடுத்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

இயக்குனரை அதை மாத்த சொல்லி டார்ச்சர் செய்த நடிகை ஜனனி!! அதிர்ச்சி கொடுத்த பத்திரிக்கையாளர்.. | Janani Iyer Reply Hotsopt Movie Issues Answers

அதற்கு ஜனனி, எனக்கு என்ன டயலாக் என்று நியாபகம் இல்லை, ஒருசில லைன் மட்டும் மாத்த சொல்லியது தான் எனக்கு நியாபகம். அப்படியெல்லாம் தப்பா எல்லாம் இல்லை என்று ஜனனி கூறியிருக்கிறார்.

மேலும், ஜனனிக்கு ஜோடியாக நடித்த நடிகரிடம், அவர் சட்டையை பிடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது என்று பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார். அதற்கு, அந்த நடிகர் அமர், சட்டை பிடித்தால் என்ன தோணும், அதெல்லாம் ஒன்னும் இல்லை, லைட், கேமரா எல்லாம் இருக்கு. அவர்களை பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது என்று கூறியிருக்கிறார்.