விவாகரத்தான தமிழ் நடிகரை கண்டு தலைதெறிக்க ஓடிய ஸ்ரீதேவியின் மகள்..
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவிக்கும், தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகளை தமிழில் அறிமுகமாக்க வேண்டும் என்று முடிவு செய்து, தமிழ் படங்களின் கதைகளை கேட்டு வருகிறாராம். அப்படி, தனுஷ் நடித்து, இயக்கவிருக்கும் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவைக்க அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அணுகியுள்ளார்.
ஆனால், தனுஷ் படமா வேண்டவே வேண்டாம் என்று கூறி விட்டாராம் போனி கபூர். இதுமட்டுமின்றி இதற்குமுன் தனுஷ் நடித்து வெளிவந்த அட்ராங்கி ரே படத்திலும் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது, ஜான்வி கபூர் தானாம். ஹீரோ தனுஷ் என்ற ஒரே காரணத்தினால் ஜான்வி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.