பசங்களோடு பேச பாத்ரூம் போவேன்னு தாப்பால் போடவில்லை.. உண்மையை உடைத்த ஸ்ரீதேவி மகள்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் டாப் நம்பர் 1 நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியாக இருந்த ஸ்ரீதேவி மர்மமான முறையில் சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார்.
அம்மா இறந்த பிறகு தடக் படத்தின் மூலம் நடிகையாக களமிரங்கி பாலிவுட் நடிகையாக ஜொலித்து வருகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஜான்வி கபூர், தன்னுடை அம்மா ஸ்ரீதேவி சென்னையில் கட்டிய வீட்டில் இருந்து கொண்டு ஹோம் டூர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தந்தை போனி கபூர் அலுவலம் முதல் ரகசிய அறை, ஜான்வி கபூர் அறை, பாத்ரூம், ஜிம் ரூம் என்று அனைத்தையும் அந்த வீடியோவில் காட்டியுள்ளார். ரகசியமாக இருக்கும் அறையில் இதுவரை ஜான்வி கபூர் போனதில்லை என்று அங்கு என்ன இருக்கிறது என்று கூட தெரியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய அறையில் இருக்கும் பாத்ரூமிற்கு அம்மா தாப்பால் போடாமல் விட்டுவிட்டார். அதற்கு காரணம் நான் பசங்களுடன் போனில் பேச பாத்ரூமை பயன்படுத்திடுவேனோ என்று பயந்து தாப்பால் போடாமல் இருந்தார்.
தந்தை புதுபித்தும் கூட பாத்ரூம் தாப்பாலை போடவில்லை என்று ஜான்வி கபூர் சோகத்துடன் தெரிவித்துள்ளார். பிரம்மாண்ட வீட்டினை ஸ்ரீதேவி தான் வடிவமைத்தும் அங்குள்ள ஓவியத்தை வரைந்தும் வைத்திருப்பதாக கூறியுள்ளார் ஜான்வி கபூர்.