புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த 50 வயதான சோனாலி பந்த்ராவின் தற்போதைய நிலை....
சோனாலி பிந்த்ரே
தமிழ் சினிமாவில் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு ஐட்டம் பாடலில் நடனமாடி அனைவரையும் ஈர்த்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் மாடலாக இருந்து பின் நடிகையாகினார்.
தமிழில் நடிகர் குணால் சிங்குடன் காதலர் தினத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெரியளவில் பெற்றார். இதையடுத்து பல படங்களில் கமிட்டாகிய சோனாலி 2002-ல் திருமணம் செய்து அதன்பின்னும் நடிப்பில் ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் 2013ல் இருந்து சினிமாவில் இருந்து விலகினார்.
கடந்த 2018-ன் போது மார்பக புற்றுநோயால் அவதியுற்றார். அதற்காக நியூயார்க் நகருக்கு சென்று முழு சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் இந்தியா திரும்பினார்.
பழைய நிலைக்கு மாறிய சோனாலி தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வுகளை இணையத்தில் பகிர்ந்து வரும் சோனாலியின் சமீபத்திய புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.