இந்த புகைப்படத்தில் உள்ள இந்திய சினிமா நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா?
Janhvi Kapoor
Viral Photos
By Kathick
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் தனது திரையுலக பயணத்தை பாலிவுட்டில் தொடங்கி இன்று தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.

இவருடைய தாய் இந்திய சினிமாவில் டாப் நட்சத்திர அந்தஸ்தில் இருந்தவர். அதே போல் இவருடைய தந்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் வேறு யாருமில்லை, நடிகை ஜான்வி கபூர்தான்.
இன்று ஜான்வி கபூரின் 29வது பிறந்தநாள் என்பதால், அவருடைய தங்கை குஷி கபூர், ஜான்வியின் சிறு வயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
