ஸ்ரீதேவி மறைந்த போது நான் சிரித்தேனா? மனமுடைந்த மகள் ஜான்விகபூர்

Sridevi Janhvi Kapoor Actress
By Bhavya Sep 03, 2025 02:30 PM GMT
Report

ஸ்ரீதேவி

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார்.

சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார். தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீதேவி மறைந்த போது நான் சிரித்தேனா? மனமுடைந்த மகள் ஜான்விகபூர் | Janhvi Kapoor Open About Mother Sridevi

மனமுடைந்த ஜான்விகபூர்

இந்நிலையில், தனது அம்மா மறைவுக்கு பின் ஜான்வி எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " தாயின் எதிர்பாராத மரணத்திற்குப் பின், பொது இடத்தில் என்னிடம் துக்கம் விசாரித்தனர். என் அம்மாவின் மரணத்தின் போது அமைதியாக இருந்ததற்கு உணர்ச்சி அற்றவர் என நான் விமர்சிக்கப்பட்டேன்.

அதுமட்டுமின்றி, அம்மா மறைவுக்குப் பின்னர் நான் என் படத்தின் புரோமோசனின் போது சிரித்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.         

ஸ்ரீதேவி மறைந்த போது நான் சிரித்தேனா? மனமுடைந்த மகள் ஜான்விகபூர் | Janhvi Kapoor Open About Mother Sridevi