சினிமாவில் ஆண்களால் பட்ட கஷ்டம்.. ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் வேதனை!
ஜான்விகபூர்
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.

இப்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.
வேதனை!
இந்நிலையில், ஜான்விகபூர் சினிமாவில் ஆண் ஆதிக்கம் இருப்பதாக கூறி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் திரைப்பட பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்துலிருந்து வந்திருந்தாலும், இங்கு வந்த பிறகு சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
திரைத்துறையில் சிறந்து விளங்க, நீங்கள் ஆண் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நான் நிறைய போராடியிருக்கிறேன். நான்கு பெண்கள் இருக்கும் இடத்தில் என் கருத்தை தைரியமாக வெளிப்படுத்த முடியும்.
ஆனால் நான்கு ஆண்கள் அங்கு இருந்தால் என் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது. சில நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டியிருக்கும். இது போன்ற அரசியலை நான் பல இடங்களில் எதிர்கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
