வீடியோவை கட் செய்து வைரலாகிவிட்டனர்.. டிரோல்களுக்கு பதிலளித்த ஜான்வி கபூர்

Sridevi Janhvi Kapoor Actress
By Bhavya Aug 20, 2025 08:30 AM GMT
Report

ஜான்வி கபூர் 

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்.

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில், ஜான்வி மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் பங்கேற்றார். அப்போது, ஜான்வி பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டார்.

வீடியோவை கட் செய்து வைரலாகிவிட்டனர்.. டிரோல்களுக்கு பதிலளித்த ஜான்வி கபூர் | Janhvi Kapoor Reply To Her Trolls

டிரோல்களுக்கு பதில் 

இது தெடர்பான வீடியோ வெளியாகி பலர் ஜான்வியை, இது சுதந்திர தினம் இல்லை என்று ட்ரோல் செய்ய தொடங்கினர். தற்போது, இதற்கு தனது இன்ஸ்டா தளத்தில் ஜான்வி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், " அங்குள்ள அனைவரும் எனக்கு முன் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினர். அதன் பின் தான் அதை நான் சொன்னேன்.

வேண்டுமென்றே வீடியோவை கட் செய்து வைரலாகி வருகின்றனர். மேலும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டுமல்ல, தினமும் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.  

வீடியோவை கட் செய்து வைரலாகிவிட்டனர்.. டிரோல்களுக்கு பதிலளித்த ஜான்வி கபூர் | Janhvi Kapoor Reply To Her Trolls