25 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ்! வேண்டவே வேண்டாம் என தெரித்து ஓடும் ஸ்ரீதேவி மகள்..

Sridevi Janhvi Kapoor Shah Rukh Khan Salman Khan Aamir Khan
By Edward Aug 03, 2022 07:50 AM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த சில வருடங்களுக்கு முன் துபாயில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு அடுத்து தன் மகள்களை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

25 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ்! வேண்டவே வேண்டாம் என தெரித்து ஓடும் ஸ்ரீதேவி மகள்.. | Janhvi Kapoor Reveals Act With Biggest Old Stars

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூருக்கு பிறந்த மகளாக ஜான்வி கபூர் தடக் என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் நயன் தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட்லக் ஜெர்ரி படத்தில் நடித்துள்ளார். மேலும் ஒருசில படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிப்படையாக பல விசயங்களை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பினார்.

25 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ்! வேண்டவே வேண்டாம் என தெரித்து ஓடும் ஸ்ரீதேவி மகள்.. | Janhvi Kapoor Reveals Act With Biggest Old Stars

தற்போது அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி, மூவரும் முக்கிய பாலிவுட் நடிகர்கள். அவர்களுடன் அனைவரும் இணைந்து நடிக்க ஆசைதான் படுவார்கள்.

ஆனால் அவர்களின் வயது என்னை விட அதிகமாக இருப்பதால் செட்டாகுமா இல்லை தனித்துவமாக தெரிந்துவிடும்.அதனால் வேண்டாம் என்று கூறியுள்ளார். தற்போது நடிகர் வருண் தவான், ரன்பீர் கபூர் படங்களில் நடிக்க கமிட்டாகி பாவல் படத்தில் ஷூட்டிங்கில் பிஸியாகவும் இருந்து வருகிறார்.

Gallery