இவர் கூட 5 கோடி, அவர் கூட 10 கோடி.. நயன்தாராவை மிஞ்சும் ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவிற்கும் வந்துவிட்டார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவாரா படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ஜான்வி கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். தென்னிந்திய சினிமாவில் தனது அறிமுக படத்திலேயே ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ள ஜான்வி கபூர் தன்னுடைய இரண்டாவது படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் கேட்டுள்ள விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், ஜூனியர் என்.டி. ஆர் படத்தை தொடர்ந்து ராம் சரண் படத்தில் நடிக்கவுள்ளார் ஜான்வி. இப்படத்தில் நடிப்பதாக ரூ. 10 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இந்த விஷயம் தெலுங்கு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகியாக ஜொலித்து வரும் நயன்தாராவே தற்போது ரூ. 12 கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால், நேற்று வந்த ஜான்வி கபூர் ரூ. 10 கோடி சம்பளம் கேட்கிறாரே என பேச்சு எழுந்துள்ளது.