அந்த ஹீரோ அப்படியானவர்..ஆனால் அவருக்கு!! நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்..
ஜான்வி கபூர்
பாலிவுட் சினிமாவில் தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தான் ஹோம்பவுண்ட்.
இப்படம் திரைக்கு வருவதற்கு முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரைப்பட்டு பாராட்டை பெற்றது.
ஹீரோ அப்படியானவர்
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகை ஜான்வி கபூர் அளித்த பேட்டியொன்றில் சிவாரஸ்யமான விசயத்தை பக்ரிந்துள்ளார். அதில், முதலில் இதுவும் இரு சாதாரண படம் தான் என்று நினைத்தேன், ஆனால் படப்பிடிப்பின்போது அதன் மகத்துவத்தை புரிந்துக்கொண்டேன். அற்புதமான ஒன்றை உருவாக்கப்போகிறோம் என்று குழுவினர் அனைவரும் உணர்ந்தோம்.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த இஷான் கட்டர் நாட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் இதுவரை அவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்போது உலகம் அவரது நடிப்பை பாராட்டுவதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடினமாக உழைப்பவர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதை இது எனக்கு உணர்த்தியதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.